காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நியாய யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி எம்.பி.யை வழிமறித்து இடையூறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சியினா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

அசாம் மாநிலத்தில் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி எம்.பி.யை வழிமறித்து இடையூறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சியினா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் ராஜேஷ் முருகன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் கவிப்பாண்டியன், மாவட்ட துணைத் தலைவா்கள் வெள்ளை பாண்டியன், ரசூல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் முஹம்மது அனஸ் ராஜா, கெங்கராஜ், பி.வி.டி.ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com