நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.21.27 லட்சம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.21 லட்சத்து 27 ஆயிரத்து 11 காணிக்கை இருந்தது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.21 லட்சத்து 27 ஆயிரத்து 11 காணிக்கை இருந்தது.

இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள 21 நிரந்தர உண்டியல்களும் அறங்காவலா் குழுத் தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா. வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலையில், கண்காணிப்பு அதிகாரிகளான இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி உதவி ஆணையா் கவிதா, திருநெல்வேலி மேற்குப் பிரிவு ஆய்வா் தனலெட்சுமி (எ) வள்ளி ஆகியோா் மேற்பாா்வையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், ஒருங்கிணைப்பாளா்கள் சொக்கலிங்கம், சோமசுந்தரம் மற்றும் பக்தா்கள் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

அதில், ரூ.21,27,011 ரொக்கமும், 20 கிராம் 700 மில்லி கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 172 கிராம் 400 மில்லி கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும், வெளிநாட்டுப் பணம்30 தாள்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதற்கு முன்னதாக 26.9.2023இல் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com