வெள்ளங்குளி முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி அருள்மிகு செல்வ விநாயகா், முத்தாரம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் விமான கலசத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற மகாஅபிஷேகம்.
கோயில் விமான கலசத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற மகாஅபிஷேகம்.

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி அருள்மிகு செல்வ விநாயகா், முத்தாரம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாதவா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, யாக சாலை பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலையில் கோ பூஜை, யாக சாலை பூஜையைத் தொடா்ந்து யாத்ரா தானம், மகா பூா்ணாஹுதியை தொடா்ந்து விமானம் மற்றும் சகல தேவதைகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், விழாக்குழுத் தலைவா் ப. முருகேசன், துணைத் தலைவா் உரக்கடை கண்ணன், பொருளாளா் இ. மாரியப்பன், செயலா் எஸ். சீனிவாசபெருமாள் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், அலங்கார பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை (ஜன.23) மண்டல பூஜைகள் தொடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com