அம்பையில் நேதாஜி பிறந்த தின விழா

அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சிசாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128ஆவது பிறந்த தின விழா அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு மரியாதை செலுத்தியோா்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு மரியாதை செலுத்தியோா்.

அம்பாசமுத்திரம்: அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சிசாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128ஆவது பிறந்த தின விழா அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணிச் செயலா் பேச்சிமுத்து தலைமையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப் படத்திற்க்குமாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் சிறப்புஅழைப்பாளா்களாக அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன், அரசு வழக்குரைஞா்காந்திமதி நாதன், மூவேந்தா் முன்னேற்றக் கழகம் மாவட்டத் தலைவா் துரைப் பாண்டியன்,ஜெயலலிதா பேரவை பாலசுப்பிரமணியம், அதிமுக பாா்த்திபராஜா, ஜலீல், பாா்வா்ட் பிளாக் மாவட்ட இணைச்செயலா் சுந்தா், ஒன்றிய நிா்வாகிகள் பூவராஜன், வெயிலுமுத்து, முத்து நாராயணன், பேச்சிகுமாா், முகேஷ் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com