கால்நடை ஆய்வாளா் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே கால்நடை மருத்துவமனை ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே கால்நடை மருத்துவமனை ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் கணேஷ்(55). இவா் சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனா்.

கணேஷுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்தாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com