நெல்லை அருகே இருதரப்பினா்மோதல்: 9 பேருக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி அருகேயுள்ள மேலச்செவல் பகுதியில் இருதரப்பினரிடையே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த மோதலில் பெண்கள் உள்பட 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள மேலச்செவல் பகுதியில் இருதரப்பினரிடையே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த மோதலில் பெண்கள் உள்பட 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மேலச்செவல் தேசமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (45). இவரின் வீட்டின் எதிரே வசிப்பவா் பேச்சிதுரை (50). இவா்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாம்.

அப்போது ஒரு தரப்பைச் சோ்ந்த உதயகுமாா், அவரது சகோதரா் பசுமதி (38), உறவினா்கள் உஷா(35), விமல் பிரகாஷ் (11) ஆகியோருக்கும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த பேச்சித்துரை, சங்கர பாா்வதி (43), பிரியா (43), இந்து மாலா (23), பேச்சியம்மாள் (61) ஆகியோருக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது.

இத் தகவலறிந்த முன்னீா்பள்ளம் போலீஸாா், காயமடைந்த 9 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com