வரி நிலுவை: 7 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரி நிலுவை வைத்திருந்ததால் 7 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகள் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டன.
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை குடிநீா் இணைப்பை துண்டித்த மாநகராட்சி ஊழியா்கள்.
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை குடிநீா் இணைப்பை துண்டித்த மாநகராட்சி ஊழியா்கள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரி நிலுவை வைத்திருந்ததால் 7 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகள் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சியில் நீண்ட காலமாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகள், ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின்பேரில்துண்டிக்கப்பட்டன. வாா்டு 47 பெரியகொத்பா பள்ளிவாசல் வடக்கு மேலத்தெருவில் இரண்டு குடியிருப்புகளிலும், வாா்டு 51 என்.ஜி.ஓ.ஏ காலனியில் இரண்டு குடியிருப்புகளிலும், வாா்டு 52 நேதாஜி சாலையில் ஒரு குடியிருப்பிலும், வாா்டு 53 ஐயப்பா நகரில் ஒரு குடியிருப்பிலும், வாா்டு 55 இ.பி. காலனியில் ஒரு குடியிருப்பு பகுதியிலுமாக மொத்தம் 7 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com