அருகன்குளத்தில் 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 6 போ் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளத்தில் 23 டன் ரேஷன் அரிசியை போலீஸாா்  பறிமுதல் செய்தனா்.
அருகன்குளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
அருகன்குளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

திருநெல்வேலி அருகேயுள்ள அருகன்குளத்தில் 23 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி சரக குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் தலைமையில் போலீஸாா் அருகன்குளம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது வயல்வெளியில் 566 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் சுமாா் 23 டன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம்.

விசாரணையில், அருகன்குளத்தைச் சோ்ந்த சின்னதுரை, அவரது தம்பி கணேசன் ஆகியோா் சோ்ந்து அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளத்தைச் சோ்ந்த நிஜாம் என்பவருக்கு அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததும். இதில், மேலும் சிலருக்கு தொடா்பிருப்பதையும் போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, அரிசியைக் கைப்பற்றிய போலீஸாா், இதுதொடா்பாக கலைஞா் என்ற கருணாநிதி, மகாராஜன், சாலை மாரியப்பன், கணேசன், சப்பாணி முத்து, மூக்கன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com