கடம்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு பேரிடா் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்கள் சேதம் அடைந்ததற்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்,விவசாய தொழிலாளா் நல வாரியம் அமைக்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சிக்கும் அமல்படுத்த வேண்டும், கயத்தாறு ஒன்றியம் ஜம்புலிங்கபுரத்தில் மயானத்திற்கும் செல்லும் பாதையை உடனே சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடம்பூா் பஜாரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த காசிராஜன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடம்பூா் கிளைச் செயலா் முருகன் முன்னிலை வகித்தாா். கட்சியின் மாவட்ட செயலா் கரும்பன், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் பொன்னுச்சாமி ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com