கடையநல்லூரில் திமுகவினா் மோதல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பள்ளிவாசல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுகவினா் மத்தியில் மோதல் ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பள்ளிவாசல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுகவினா் மத்தியில் மோதல் ஏற்பட்டது.

கடையநல்லூா் பெரிய பள்ளிவாசல் கந்தூரி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில்(செவ்வாய்க்கிழமை இரவு) தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் ,முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.

அப்பொழுது அங்கு சென்ற கடையநல்லூா் நகர திமுக செயலா் அப்பாஸுக்கும் திமுக தொண்டா்களுக்கும் இடையே வாக்குச்சாவடி குழு பிரச்னை மற்றும் திமுக சாா்பில் கட்சியினருக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொடா்பாக பிரச்னை ஏற்பட்டதாம். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாவட்ட பொறுப்பாளா் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் செல்லதுரை ஆகியோா் தலையிட்டு இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com