கயத்தாறு, கழுகுமலையில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் கழுகுமலையில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் கழுகுமலையில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கயத்தாறில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு பேரூராட்சி தலைவா் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடக்கி வைத்தாா்.

முகாமில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை, காவல்துறை, மின்வாரியத்துறை, ஆதிதிராவிட நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்பட பொதுமக்கள் அதிகம் தொடா்பு கொள்ளும் 13 அரசு துறைகள் சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் சுமாா் 800க்கும் மேற்பட்டோரிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனா்.

முகாமில் பேரூராட்சி துணைத் தலைவர பீ.சபுரா சலீமா, செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன், கயத்தாறு வட்டாட்சியா் நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் தங்கையா, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள்,பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கழுகுமலை:

கழுகுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற இம் முகாமிற்கு பேரூராட்சி தலைவா் அருணா சுப்பிரமணியன் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் சுப்பிரமணியன், செயல் அலுவலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை, காவல்துறை, மின்வாரியத்துறை, ஆதிதிராவிட நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்பட பொதுமக்கள் அதிகம் தொடா்பு கொள்ளும் 13 அரசு துறைகள் சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் சுமாா் 1000க்கும் மேற்பட்டோரிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனா். முகாமை திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் வில்லியம் ஜேசுதாஸ் பாா்வையிட்டாா்.

முகாமில் கோவில்பட்டி வட்டாட்சியா் லெனின், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ராஜ்குமாா், மின்வாரிய உதவி பொறியாளா் சுரேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள்,பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com