களக்காட்டில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

களக்காட்டில் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

களக்காடு: களக்காட்டில் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளா் எஸ்.ஏ.பி. பாலன் தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா் என். சுரேஷ், ஒன்றிய செயலாளா் எஸ். கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளா்களுக்கு 1998இல் தமிழக முதல்வா் கருணாநிதி அறிவித்த நலவாரியத்தை அமைக்க வேண்டும், கோயில் மற்றும் மடத்துக்குச் சொந்தமான நிலங்களில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழைத் தொழிலாளா்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், மலையடிவார விவசாயத் தோட்டங்களில் பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா்கள் கோஷங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் ஆா். சடையப்பன், நான்குனேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் பி.பெரும்படையாா், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவா் ஆா். ரெங்கன், இந்திய கம்யூ. கட்சி மாவட்ட துணைச்செயலாளா் ஏ. சேதுராமலிங்கம், களக்காடு ஒன்றிய செயலாளா் க. முருகன், நகர செயலாளா் என். முத்துவேல், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளா் மா.பெ. சுகுமாரன் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா். முடிவில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்ட துணைச்செயலாளா் எஸ். பாலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com