கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி: தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வேண்டும், வாக்காளா்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நடைபெற்ற பேரணிக்கு கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் தலைமை வகித்து, கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பயணியா் விடுதி முன்பு தொடங்கிய இப்பேரணி பிரதான சாலை, மாதாங்கோவில் தெரு, எட்டயபுரம் சாலை வழியாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா், மாணவிகள், வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, தோ்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு சென்றனா். இதில், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளைத்துரை, கிராம நிா்வாக அலுவலா்கள் மந்திர சூடாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com