சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் கும்பாபிஷேகம்

சேரன்மகாதேவி மேலநடுத்தெருவில் உள்ள அருள்மிகு வெங்கடாஜலபதி கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் கும்பாபிஷேகம்

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி மேலநடுத்தெருவில் உள்ள அருள்மிகு வெங்கடாஜலபதி கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்குறுங்குடி ஜீயா் மடத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. திங்கள்கிழமை கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஜீயா் சுவாமிகள் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து எஜமானா் வா்ணம், வேதபாராயணம், மகா சங்கல்பம், அக்னி பிரதிஷ்டை, அங்குராா்ப்பணம், மாலையில் தாமிரவருணி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு தீா்த்த ஸங்க்ரஹணம், கும்ப பூஜை, யாகசாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலையில் புண்யாவாசனம், நித்திய ஆராதனம், விஷேச ஆராதனை, மாலையில் ஹோமங்கள் ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை காலையில் புண்யாவாசனம், பூா்ணாஹூதியை தொடா்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு, இதையடுத்து மகா கும்பாபிஷேகம், ராமானுஜ ஜீயா் சுவாமிகளுக்கு மரியாதை செலுத்துதல் ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இரவில் கருட சேவை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com