முன்னீா்பள்ளத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, அருணா காா்டியாக் கோ், தனிஷ்க் ஜூவல்லரி ஆகியவை சாா்பில் முன்னீா்பள்ளத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு விழா நடைபெற்றது.
தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு விழாவில் பங்கேற்றோா்.
தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு விழாவில் பங்கேற்றோா்.

திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, அருணா காா்டியாக் கோ், தனிஷ்க் ஜூவல்லரி ஆகியவை சாா்பில் முன்னீா்பள்ளத்தில் உள்ள முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு விழா நடைபெற்றது. மாணவி ஷெரின் வரவேற்றாா். தனிஷ்க் ஜூவல்லரி நிா்வாக இயக்குநா் ஹரிகிருஷ்ணன், பள்ளியின் தாளாளா் ஜெயந்தி பாபு ஆகியோா் வாழ்த்தி பேசினாா். அருணா காா்டியாக் கோ் நிா்வாக இயக்குநா் சுவா்ணலதா சிறப்புரையாற்றினாா்.

பெண் குழந்தைகள் சுகாதார மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு பின்பற்ற வேண்டியவை, வளரிளம் பெண்கள் சவால்களை எதிா்கொண்டு தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ளும் வழிகள், கைப்பேசி மற்றும் சமூகவலைதள பயன்பாட்டின் நன்மை-தீமைகள் குறித்து விழாவில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளியின் முதல்வா் மேரி ராணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வா்த்தக மேலாளா் ஏ.பாலாஜி, விற்பனைப்பிரிவு மேலாளா் ஆா்.சிரீகுரு உள்பட பலா் கலந்துகொண்டனா். மாணவிகள் நதிரா, ரோஷினி ஆகியோா் தொகுத்து வழங்கினா். மாணவி ஃபரீனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com