நவோதயா பள்ளிகளை திறக்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்கக் கோரி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.
கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.

திருநெல்வேலி: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்கக் கோரி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இதையொட்டி, அக்கட்சியின் தென் மண்டலச் செயலா் ராஜா பாண்டியன் தலைமையில், சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சியின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து அவா்கள் தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதங்களை அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com