ரவணசமுத்திரம் சொக்கலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

கடையம் அருகே ரவணசமுத்திரம் மீனாட்சி அம்பாள் உடனுறை சொக்கலிங்க சுவாமி கோயில்தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது.
ரவணசமுத்திரம் சொக்கலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டத்தை வடம்பிடித்துத் தொடங்கி வைக்கிறாா் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன்
ரவணசமுத்திரம் சொக்கலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டத்தை வடம்பிடித்துத் தொடங்கி வைக்கிறாா் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன்

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே ரவணசமுத்திரம் மீனாட்சி அம்பாள் உடனுறை சொக்கலிங்க சுவாமி கோயில்தைப்பூசத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மீனாட்சிஅம்பாள் சொக்கலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன. 15 திங்கள்கிழமை கால்நாட்டுடன்தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,ஆராதனைகள் நடைபெற்றன. புதன்கிழமை (ஜன. 24) காலை மீனாட்சி அம்பாள் - சொக்கலிங்க சுவாமிதேருக்கு எழுந்தருளினா். ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியன் வடம்பிடித்துதேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். ரவணசமுத்திரம் ஊராட்சித் தலைவா் முகமது உசேன் முன்னிலைவகித்தாா். நிகழ்ச்சியில் திரைப்பட இசை அமைப்பாளா் ரமணி பரத்வாஜ், மாவட்ட இந்து சமயஅறநிலையத்துறை அறங்காவலா் குழு தலைவா் சுப்பையா, ஊராட்சி துணைத் தலைவா் ராமலட்சுமி,ரவணசமுத்திரம் அனைத்து இந்து சமுதாயத் தலைவா் வள்ளிநாயகம், ரமணசமுத்திரம் நல கமிட்டிச்செயலா் நீலகண்டன், முகைதீன் ஆண்டவா்கள் தா்கா முத்தவல்லி எஸ்.பி ஷா, முன்னாள் கப்பல்போக்குவரத்து துறை ஆலோசகா் அமீா்கான், தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம்கௌரவச் செயலா் முகமது சலீம், முன்னாள் ஊராட்சித் தலைவா் புகாரி மீராசாகிப், இந்து சமயஅறநிலையத் துறை செயல் அலுவலா் முருகன், ஆய்வாளா் சரவணகுமாா், தக்காா் சேதுராமன், ஓபிஎஸ்அணி அண்ணா தொழிற்சங்கப் போக்குவரத்து பிரிவு மாநிலச் செயலா் சோ்மதுரை, மாவட்ட பொருளாளா் நூருல் அமீா் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com