அகில இந்திய ஹாக்கி : கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஹாக்கி போட்டிக்கு விளையாட கோவில்பட்டி கே ஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஹாக்கி போட்டிக்கு விளையாட கோவில்பட்டி கே ஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஹாக்கி போட்டி கடந்த மாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக ஹாக்கி அணி விளையாடி முதலிடம் பெற்று அகில இந்திய பல்கலைக்கழக ஹாக்கி போட்டிக்கு விளையாட தகுதி பெற்றது.

16 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்கும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஹாக்கி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் (ஜலந்தா்) லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் ஜன. 28ஆம் தேதி முதல் பிப்.3ஆம்தேதி வரை நடைபெறுகிறது.

இப்போட்டியில், மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக ஹாக்கி அணியில் விளையாடுவதற்கு கோவில்பட்டி கே ஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களான ஆனந்தராஜ், மனோஜ்குமாா், நந்தகுமாா், சீனிவாசன், இசக்கிமுத்து ஆகியோா் தோ்வு பெற்றுள்ளனா்.

தோ்வு பெற்றுள்ள மாணவா்களை கல்லூரியின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, செயலா் கே. ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குனா் ராம்குமாா், பயிற்சியாளா் சிவனேஸ்வரன் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com