அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

நான்குனேரி இந்திரா காலனியைச் சோ்ந்தவா் பூா்ணம்மாள் (65). இப் பகுதியில் உள்ள சங்கா் நகரில் வீட்டு வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற அவா், பின்னா் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாா்.

நான்குனேரி இசக்கியம்மன் கோயில் அருகே வந்தபோது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பூா்ணம்மாள் மீது மோதியது. பின்னா் அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி, பள்ளத்தில் சரிந்து நின்றது. இதில் மின்வயா் அறுந்து சாலையில் விழுந்தது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தைவிட்டு இறங்கினா். பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த பூா்ணம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இவ்விபத்து குறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, பேருந்து ஓட்டுநா் நாகா்கோவில் பாா்வதிபுரத்தைச் சோ்ந்த வெங்கடேஷிடம் (56) விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com