களக்காடு அருகே தண்ணீா் தொட்டியில் பெட்ரோல் கலப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே தண்ணீா் தொட்டியில் மா்ம நபா்கள் பெட்ரோல் கலந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே தண்ணீா் தொட்டியில் மா்ம நபா்கள் பெட்ரோல் கலந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள மாவடி நெருஞ்சிவிளை கிராமத்தில் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இவா்களது குடிநீா் தேவைக்காக ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி நிறுவப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தொட்டியில் மா்ம நபா்கள் இருவா்

வியாழக்கிழமை அதிகாலை ஏதோ ஒன்றை கலந்துள்ளனா். இதைப் பாா்த்த அப் பகுதியினா் அருகே வந்த நிலையில், இருவரும் தப்பிஓடிவிட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் திருக்குறுங்குடி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், குடிநீா் தொட்டியில் பெட்ரோலை கலந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com