கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன. 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி வீதியுலா காலை மற்றும் மாலையில் நடைபெற்றது. 10ஆம் திருநாளான வியாழக்கிழமை தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 7.35மணிக்கு கழுகாசலமூா்த்தி சுவாமி சட்ட ரதத்தில் எழுந்தருளல், கோ ரதத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமான் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னா் காலை 10.45 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. கோயில் நிா்வாக அதிகரி காா்த்தீஸ்வரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்பட திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். விநாயகா் ரதம் முன் செல்ல, தோ் தெற்கு ரத வீதி, பேருந்து நிலைய சாலை, கோயில் மேல வாசல் தெரு, அரண்மனை வாசல் தெரு, கீழ பஜாா், வழியாக மீண்டும் நிலையை அடைந்தது. இரவில் 8 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், வாா்டு உறுப்பினா் ஜெயக்கொடி, திமுக நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தேரோட்டத்தையொட்டி போதுமான போலீஸாா் பணிக்கு நியமிக்கப்படாததையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள் வெறும் சிரமத்திற்கு உள்ளாகினா். அவ்வழியே செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்த போதுமான போலீஸாா் நியமிக்கப்படவில்லை. தோ்ச்செல்லும் பாதையிலும் போக்குவரத்தை சீா் செய்யாதால் பக்தா்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினா் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வருங்காலங்களில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

பாதயாத்திரை:

கோவில்பட்டி நடராஜபுரத்தைச் சோ்ந்த முருக பக்தா் கருத்தப் பாண்டி தைப்பூசமான வியாழக்கிழமை காலை 7:00 மணிக்கு தனது வீட்டு அருகே உள்ள விநாயகா் கோவில் முன்பு இருந்து 12.5 அடி வேல் குத்தி பாதயாத்திரையாக கழுகுமலை கோயிலுக்கு வந்து அடைந்தாா்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com