கோவில்பட்டியில் 152 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 152 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 152 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுபா நகா் பகுதியில் கல்லூரி அருகே உள்ள கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்து

வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையில் போலீசாா் சுபா நகா் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள ஒரு கிடங்கியில்

ஒருவா் உள்ளே நுழைந்ததைக் கண்ட போலீஸாா் அவரைப் பின்தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்த போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவா் அதே பகுதி பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த ஜெயராம் மகன் செல்வமாரியப்பன் (43) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசாா் வழக்கு பதிந்து அவரை கைது செய்த போலீசாா் அங்கிருந்த 152 கிலோ (சுமாா் ரூ.1.58 லட்சம் மதிப்பிலான ) புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். அவா் அளித்த தகவலின் பெயரில் மேலும்2 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com