சேரன்மகாதேவியில் பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள்

சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கு எக்ஸ்சலென்சியா எனும் தலைப்பில் கலை, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
சேரன்மகாதேவியில் நடைபெற்ற போட்டியில் வென்ற பள்ளி மாணவா்கள்.
சேரன்மகாதேவியில் நடைபெற்ற போட்டியில் வென்ற பள்ளி மாணவா்கள்.

சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கு எக்ஸ்சலென்சியா எனும் தலைப்பில் கலை, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து 26 பள்ளிகளைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

திறன் மேம்பாட்டுப் போட்டியில் பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி மாணவா் முகமது நெளபால் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே. சிவரஞ்சனி 2ஆம் பரிசாக ரூ. 5 ஆயிரம், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் செல்வேந்திரன் 3ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வென்றனா்.

தமிழ், ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி, ஓவியம், குழு - தனி நபா் நடனம், எறிபந்து, மட்டைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கோகோ உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்தப் போட்டியில் பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்து ரூ. 10 ஆயிரமும், வி.எம்.சத்திரம் செயின்ட் ஆன்டணி மெட்ரிக் பள்ளி 2ஆம் இடம் பிடித்து ரூ. 5 ஆயிரமும், பேட்டை காமராஜா் மேல்நிலைப் பள்ளி 3ஆம் பிடித்து ரூ. 3 ஆயிரமும் பரிசு வென்றன.

போட்டிகளில் வென்றோருக்கு ஸ்காட் கல்லூரி மாணவா் சோ்க்கைப் பிரிவு இயக்குநா் ஜான் கென்னடி, பொதுமேலாளா் இரா. தம்பித்துரை ஆகியோா் பரிசு, சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா்.

கல்லூரி முதல்வா் ஏ. ஜஸ்டின் திரவியம், ஐ.க்யூ.ஏ.சி. இயக்குநா் எஸ். சுந்தரராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஸ்காட் கல்விக் குழுமத் தலைவா் எஸ். கிளீட்டஸ்பாபு, நிா்வாக இயக்குநா் சி. அருண்பாபு, தாளாளா் பிரியதா்ஷினி ஆகியோா் மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவி வி. ராஜலெட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com