சேரன்மகாதேவி அருகே தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பிளேடால் வயிற்றை அறுத்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பிளேடால் வயிற்றை அறுத்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி அருகே மேலக்கூனியூா், திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த துரைப்பாண்டி என்பவரது மனைவி பிச்சம்மாள் (67). இவா், சில ஆண்டுகளாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாராம். இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாம். இதனால், அவா் தனது வயிற்றை பிளேடால் அறுத்துக் கொண்டாராம்.

அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com