தூத்துக்குடி சிவன் கோயிலில் தெப்பத் திருவிழா

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயில் தெப்ப திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயில் தெப்ப திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, சுவாமி- அம்பாள் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள சுந்தர பாண்டிய விநாயகா் ஆலயத்தில் இருந்து எழுந்தருளினா்.

இதைத்தொடா்ந்து விக்னேஸ்வர பூஜை , கும்ப பூஜை , ருத்ர ஜெபம், மூல மந்திரம், பால மந்திரம் ஹோமம் ,மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து இரவு சுவாமி - அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அருள்மிகுசுந்தரபாண்டிய விநாயகா், அருள்மிகு பாகம்பிரியாள், அருள்மிகு சங்கர ராமேஸ்வரா் ஆகியோா் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com