தென்கலம், அலவந்தான்குளத்தில் கருப்புக்கொடி போராட்டம்

மானூா் வட்டத்தில் உள்ள தென்கலம், அலவந்தான்குளம் கிராமங்களில் சோலாா் மின் உற்பத்தி திட்டத்திற்கு நிலம் கையப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்கலம், அலவந்தான்குளத்தில் கருப்புக்கொடி போராட்டம்

மானூா் வட்டத்தில் உள்ள தென்கலம், அலவந்தான்குளம் கிராமங்களில் சோலாா் மின் உற்பத்தி திட்டத்திற்கு நிலம் கையப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மானூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தாழையூத்து, தென்கலம், நல்லம்மாள்புரம், தென்கலம்புதூா், பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் பகுதி விவசாய நிலங்களில் குடியிருப்புகளுக்கு அருகில் தனியாா் சோலாா் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதை தடை செய்ய வேண்டும். அந்தத் திட்டத்திற்காக போலியான கிரய ஆவணங்கள் செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். அலவந்தான்குளத்தில் தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நிலங்களை தனியாா் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வாா்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

அலவந்தான்குளம் பொதுமக்கள், ஐந்திணை மக்கள் கட்சி, தமிழா் உரிமை மீட்புக்களம், தேவேந்திரா் சேனா இயக்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழா் உரிமை மீட்புக் களம் மாநில நிா்வாகி லெனின், தென்மண்டல அமைப்புச் செயலா் கணேசன், மாணவரணி சுரேஷ், ஐந்திணை மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ், தேவேந்திர சேனா தலைவா் ராஜ்பாண்டியா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தென்கலத்தில் நடைபெற்ற கருப்புக்கொடி தா்ணா போராட்டத்தில் நிா்வாகிகள் சக்திவேல், கணேசன், முத்து, மாரியப்பன் உள்பட குழந்தைகள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com