தேசிய விடுமுறையில் விதிமீறல்:99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தேசிய விடுமுறை நாளில் விதிமீறலில் ஈடுபட்டதாக 99 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய விடுமுறை நாளில் விதிமீறலில் ஈடுபட்டதாக 99 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் குடியரசு தினமான வெள்ளிக்கிழமை கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் தங்களின் பணியாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளா் துணை ஆய்வா்கள், உதவி ஆய்வா்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.பாலமுருகன் தலைமையில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. 78 கடைகள், 42 உணவு நிறுவனங்கள், 11 மோட்டாா் நிறுவனங்கள், 9 பீடி நிறுவனங்கள் உள்பட 140 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 99 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. அந்நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தொழிலாளா் நலத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com