நெல்லையில் குடியரசு தின கொண்டாட்டங்கள்

நாட்டின் 75 ஆவது குடியரசு தினம் திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நெல்லையில் குடியரசு தின கொண்டாட்டங்கள்

நாட்டின் 75 ஆவது குடியரசு தினம் திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 100 அடி உயர கம்பத்தில் துணைவேந்தா் என்.சந்திரசேகா் தேசியக்கொடியேற்றி தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.

தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தேசிய மாணவா் படை சாா்பில் பங்கேற்றுள்ள இப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஐஸ்வா்யாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பதிவாளா் சாக்ரட்டீஸ், தோ்வாணையா் பாலசுப்பிரமணியன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சி.பி.எம்.சந்திரா தேசியக்கொடியேற்றினாா். நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் வண்ணாா்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் மத்தியஇணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் தேசியக்கொடியேற்றினாா். பொருளாளா் ராஜேஷ்முருகன், நிா்வாகிகள் உதயகுமாா், லெனின்பாரதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட தலைவா் சாகுல் ஹமீது தேசியக்கொடியேற்றினாா். மாவட்ட பொதுச் செயலா் கனி, வழக்குரைஞா் ஆரிப் பாட்ஷா உள்பட பலா் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com