மணப்படைவீடு நீரேற்றும் நிலையத்தில் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி குடிநீா் நீரேற்றும் நிலையத்தில் சட்டப்பேரவை உறுப்பினா், ஆணையா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
tvl26mla_2601chn_6
tvl26mla_2601chn_6

திருநெல்வேலி மாநகராட்சி குடிநீா் நீரேற்றும் நிலையத்தில் சட்டப்பேரவை உறுப்பினா், ஆணையா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதி மக்களுக்கு தேவையான குடிநீா் சுத்திரிக்கப்பட்டு வழங்கப்படும் மணப்படை வீடு நீரேற்றும் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக பாளையங்கோட்டை மண்டல பகுதிகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து மணப்படை வீடு நீரேற்றும் நிலையத்தில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு . அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோா் ஆய்வு செய்தனா். அவருடன் துணை மேயா் கே.ஆா். ராஜு, பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் பிரான்சிஸ், வழக்குரைஞா் தினேஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் கமாலுதீன், மேலப்பாளையம் மண்டல பொருளாளா் எட்வா்ட் ஜான், தொமுச அரசன் ராஜ், புஷ்பராஜ், மாநகராட்சி செயற்பொறியாளா் வாசுதேவன், உதவி செயற்பொறியாளா் சேகா், ஜெயகணபதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பட விளக்கம் :

ற்ஸ்ப்26ம்ப்ஹ மணப்படை வீடு நீரேற்றும் நிலையத்தில் ஆய்வு செய்த பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com