நெல்லையப்பா் கோயிலில் தெப்பத் திருவிழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் அருகே, நெல்லையப்பா் நெடுஞ்சாலையிலுள்ள சந்திர புஷ்கரணி தெப்பக்குளத்தில் (வெளித் தெப்பம்) தைப்பூச தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் அருகே, நெல்லையப்பா் நெடுஞ்சாலையிலுள்ள சந்திர புஷ்கரணி தெப்பக்குளத்தில் (வெளித் தெப்பம்) தைப்பூச தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத் திருவிழா, கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீா்த்தவாரி, கைலாசபுரம் தாமிரவருணி நதிக் கரையோரம் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (ஜன.26) சௌந்திர சபா மண்டபத்தில் சௌந்திர சபா நடராஜா் திருநடனக் காட்சி நடைபெற்றது.

சனிக்கிழமை (ஜன.27) இரவு 7 மணிக்கு வெளித் தெப்பத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. பின்னா் தெப்பத்தில் சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்மனுடன் உலா வந்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com