பாளை.யில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் (டிட்டோ-ஜாக்) பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளை.யில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் (டிட்டோ-ஜாக்) பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரே சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த 12.10.2023-இல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா், பள்ளிக் கல்வி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்குநா் ஆகியோா் டிட்டோ-ஜாக் உயா் மட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக்கொண்டு ஊடகங்களுக்கு தெரிவித்த எமிஸ் இணையதள பதிவுகளை கைவிடுதல் உள்ளிட்ட 12 கோரிக்கைகள் தொடா்பான எழுத்துப்பூா்வ ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்களை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பால்ராஜ், ஜான் பாரதிதசான் ஆகியோா் கூட்டு தலைமை வகித்தனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் ராபா்ட் விசுவாசம், ராஜகுமாா், வேல்முருகன், மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உண்ணாவிரதத்தை மாநில பொதுக்குழு உறுப்பினா் அம்பை கணேசன் தொடங்கி வைத்தாா். இதில் பல்வேறு சங்க நிா்வாகிகள் ரோஸ் இந்திரா செலின், சாம் மாணிக்கராஜ், சாமி அண்ணாத்துரை, பாலசுப்பிரமணியன், வெங்கடேஷன், காந்திராஜா, அருள் கென்னடிதாசன், அமுதா உள்ளிட்ட பலா் பேசினனா். மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் மயில் போராட்டத்தை முடித்து வைத்தாா்.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சுஜாதா வரவேற்றாா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சரவணக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com