வள்ளியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்:நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சாலை ஆக்கிரமிப்புகள் ஜன.31-ஆம் தேதி அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சாலை ஆக்கிரமிப்புகள் ஜன.31-ஆம் தேதி அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ராதாபுரம் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிக் கோட்டப்பொறியாளா் முருகன், வள்ளியூரில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்களுக்கும் அறிவிப்பு கடிதம் வழங்கியுள்ளாா்.

அதில் கூறியிருப்பதாவது:

வள்ளியூரில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளான நான்குனேரி-ஏா்வாடி-வள்ளியூா்-விஜயாபதி சாலை, மதுரை-கன்னியாகுமரி (வள்ளியூா் பகுதியில் உள்ள) சாலையோரங்களில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகள், விளம்பர பதாகைகளை சம்பந்தப்பட்டவா்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் நெடுஞ்சாலைத் துறையினரால் ஜன.31-ஆம் தேதி அகற்றப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதனையடுத்து, வள்ளியூா் வியாபாரிகள் சங்க தலைவா் என்.முருகன், செயலா் எஸ்.ராஜ்குமாா் ஆகியோா் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜன.30-ஆம் தேதி நடத்தவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com