நெல்லை மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென இளைஞா் காங்கிரஸ் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞா் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞா் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென இளைஞா் காங்கிரஸ் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம், வண்ணாா்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் போத்திராஜ் வினோத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் கா்நீகா ஜெகன் முன்னிலை வகித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் வழக்குரைஞா் காமராஜ் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் தேவ விஜய், கிங்ஸ்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: 2024 மக்களவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா கூட்டணி ஒதுக்க வேண்டும். இத் தொகுதியில் இளைஞா்கள் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பளிக்க வேண்டும். சிப்காட் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வழங்கப்படக்கூடிய வேலைவாய்ப்பில் மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com