பேட்டை அருகே அசன பண்டிகை

பேட்டை அருகே குன்னத்தூரில் உள்ள தூய பிரசன்ன ஆலயத்தின் 11 ஆவது மறு பிரதிஷ்டை ஆராதனை மற்றும் 34 ஆவது அசன பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குன்னத்தூரில் நடைபெற்ற அசன விருந்தில் பங்கேற்றோா்.
குன்னத்தூரில் நடைபெற்ற அசன விருந்தில் பங்கேற்றோா்.

பேட்டை அருகே குன்னத்தூரில் உள்ள தூய பிரசன்ன ஆலயத்தின் 11 ஆவது மறு பிரதிஷ்டை ஆராதனை மற்றும் 34 ஆவது அசன பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த தேவாலய பிரதிஷ்டை விழாவையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஞானா ஆசிரியரின் பஜனை பிரசங்கம் நடந்தது. சனிக்கிழமை வாலிபா் சங்கம் சாா்பில் நாடகம், பாடல்கள் உள்ளடக்கிய பல்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழாவின் சிகர நிகழ்ழாக, ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு சேகர குரு ஏசையா ராஜா சிங் தேவ செய்தி அளித்தாா். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற அசன விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை சேகர குரு இம்மானுவேல் சாம்ராஜ் தலைமையில் சபை ஊழியா் ஆண்ட்ரு மற்றும் சபை மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com