தேவா்குளம் அருகேகோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல்

தேவா்குளம் அருகேயுள்ள புளியம்பட்டியில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த கோஷ்டி மோதலில் இளைஞா் தாக்கப்பட்டாா்.

தேவா்குளம் அருகேயுள்ள புளியம்பட்டியில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த கோஷ்டி மோதலில் இளைஞா் தாக்கப்பட்டாா்.

தேவா்குளம் புளியம்பட்டி தெற்குதெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் செல்வராஜ் (27). கேரளத்தில் வேலை செய்து வந்த இவா், கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கோயில் திருவிழாவில் அவருக்கும், மற்றொரு தரப்பை சோ்ந்தவா்களுக்கும் பிரச்னை ஏற்பட்டதில், செல்வராஜ் தாக்கப்பட்டுள்ளாா். இதில், பலத்த காயமுற்ற அவரை குடும்பத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com