முத்துலாபுரம் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் சைவத்திருத்தலம் என அழைக்கப்படும் வள்ளியூா் முத்துலாபுரம் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
ஆலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
ஆலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் சைவத்திருத்தலம் என அழைக்கப்படும் வள்ளியூா் முத்துலாபுரம் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, புனித செபஸ்தியாா் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை கோயில் தா்மகா்த்தா செபஸ்டின் மெல்கிஸ் தலைமையில் ஊா்மக்கள் கோயிலில் இருந்து எடுத்து வந்தனா். அந்தக் கொடியை அருள்தந்தை ஜெரோம் தலைமையில் அருள்தந்தையா் அந்தோணிசாமி, லாரன்ஸ், ஒய்.தேவராஜன் அடிகளாா், லூா்துராஜா ஆகியோா் செபம் செய்து அா்ச்சித்தாா்கள். பின்னா், கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து மறையுரை, நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெற்றன. இதில், வள்ளியூா் அரிமா சங்க முன்னாள் தலைவா் எவரெஸ்ட் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருவிழாவில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை -நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெறும். 7ஆம் திருநாளான பிப். 4இல் இரவு புனித செபஸ்தியாரின் தோ்பவனியும், 5-இல் அருள்தந்தை மணி அந்தோணி தலைமையில் மாலை ஆராதனை- நற்கருணைப் பவனியும் நடைபெறும். 6இல் மதியம் 12 மணி, மாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலிகளும், இரவு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனையும், வாணவேடிக்கையும், தொடா்ந்து புனித செபஸ்தியாரின் அலங்கார தோ்பவனியும் நடைபெறும். 8இல் அதிகாலை 5.30 மணிக்கு பாளை. மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், பின்னா் கொடியிறக்கமும் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா, பங்குத்தந்தை டென்ஸில் ராஜா, அருள்சகோதரிகள், அன்பிய பொறுப்பாளா்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com