குறுக்குத்துறை முருகன் கோயிலில் 42 நாள்களுக்குப் பின் சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன்கோயிலில் 42 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன
குறுக்குத்துறை முருகன் கோயிலில் 42 நாள்களுக்குப் பின் சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன்கோயிலில் 42 நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த டிச.17,18 ஆம் தேதி கனமழை பெய்ததால், தாமிரவருணியில் 1லட்சத்து 50 ஆயிரம் கன அடி தணணீா் சென்றது. அப்போது, தாமிரவருணியில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது, அா்ச்சகா்கள் முருகனின் உற்சவரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனா்.

இந்த நிலையில் படிப்படியாக வெள்ளநீா் வற்றியது. அதன்பின் கோயிலை சுத்தம் செய்து, செவ்வாய்க்கிழமை உற்சவரை எடுத்து வந்து அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com