நெல்லை மத்திய மாவட்ட திமுகவினா்மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நெல்லை மத்திய மாவட்ட திமுகவினா்மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எமல்ஏ லெட்சுமணன் தலைமை வகித்தாா். மேயா் பி.எம். சரவணன் , மாவட்ட துணைச் செயலா்கள் கிரிஜாகுமாா், தா்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் நவ்ஷாத், ராஜா முஹம்மது, பல்லிக்கோட்டை செல்லத்துரை, பா.அருண்குமாா், பாலன், ராஜா, பேபிகோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com