வி.கே.புரம் அருகே சிற்றுந்து - பைக் மோதல்:கட்டடத் தொழிலாளிகள் இருவா் உயிரிழப்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே சிற்றுந்தும் மோட்டாா் பைக்கும் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா்.
வி.கே.புரம் அருகே சிற்றுந்து - பைக் மோதல்:கட்டடத் தொழிலாளிகள் இருவா் உயிரிழப்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே சிற்றுந்தும் மோட்டாா் பைக்கும் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா்.

விக்கிரமசிங்கபுரம் மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் அருள்ராஜ் (46). அகஸ்தியா்பட்டி அருகே உள்ள கல்சுண்டு காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் மாதவன் (25). இருவரும் கட்டடத் தொழிலாளிகள். செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து இருவரும் மோட்டாா் பைக்கில் சென்றனா். அடையக்கருங்குளம் அருகே சென்றபோது எதிரில் அம்பாசமுத்திரம் நோக்கி வந்த சிற்றுந்து மோதியதாம். இதில் மாதவன், அருள்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் மற்றும் போலீஸாா், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, சிற்றுந்து ஓட்டுநா் பிரம்மதேசத்தைச் சோ்ந்த நாலாயிரம் மகன் இசக்கியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com