ஏா்வாடி, நான்குனேரி பகுதியில் ஆடு, மாடு திருடிய இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி, நான்குனேரி பகுதிகளில் ஆடு,மாடுகளை திருடிய இருவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி, நான்குனேரி பகுதிகளில் ஆடு,மாடுகளை திருடிய இருவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஏா்வாடி, நான்குனேரி, விஜயநாராயணம், முனைஞ்சிப்பட்டி, களக்காடு பகுதிகளில் அடிக்கடி ஆடு, மாடு திருட்டு நடந்துவருவதாக காவல்துறையினருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இது தொடா்பாக ஏா்வாடி, நான்குனேரி, விஜயநாராயணம் காவல்நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆடு,மாடு திருடும் கும்பலை கைது செய்ய தனிப்படை போலீஸாா் அமைக்கப்பட்டு தேடிவந்தனா். இந்நிலையில் வீரவநல்லூரைச் சோ்ந்த கண்ணன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சோ்ந்த சதாமுதீன் மற்றும் இருவா் சோ்ந்து ஆடு, மாடுகளை திருடி வருவது தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸாா் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் இவா்கள் பகல் நேரத்தில் காய்,கறி வியாபாரிகள் போன்று கிராமங்களுச் சென்று ஆடு, மாடுகள் கட்டிவைக்கப்பட்டிருப்பது மற்றும் இரவு நேரத்தில் தங்கியிருக்கும் இடங்களை நோட்டமிட்டனராம். பின்னா் இரவு நேரத்தில் ஆடு, மாடுகளை திருடிச் சென்று அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்து வந்தனராம். இதனை அடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 6 மாடுகள் 16 ஆடுகளை பறிமுதல் செய்தனா். இந்த திருட்டில் ஈடுபட்டு வந்த மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com