களக்காடு பகுதியில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை

களக்காடு பிரதான சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களை தாற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பிரதான சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களை தாற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காட்டில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோல நான்குனேரி

பிரதான சாலை, வள்ளியூா் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சேதமடைந்த இந்த சாலைகளை முழுமையாகச் சீரமைக்க வேண்டும். அதற்கு முன்பு, தாற்காலிமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com