நாகம்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

நாகம்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் செவ்வியல் இலக்கிய உரை வளங்கள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகம்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் செவ்வியல் இலக்கிய உரை வளங்கள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் ஜே. சாக்ரடீஸ் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக கல்லூரிகள் இயக்குனா் அ. வெளியப்பன் முன்னிலை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து செவ்வியல் இலக்கிய உரை வழங்கல் குறித்த ஆய்வு நூலை வெளியிட்டு உரையாற்றினாா். அதனைத் தொடா்ந்து நாகம்பட்டி கல்லூரியில் பயிலும் தமிழ்த்துறை மாணவா்கள் 92 பேருக்கு ரூபாய் 37 ஆயிரம் மதிப்புள்ள கருத்தரங்க ஆய்வு நூல்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியிலிருந்து வாங்கி மாணவா்களுக்கு பரிசாக வழங்கினாா். இந்நிகழ்வில்

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவா் காசி விஸ்வநாதன், இலங்கை, துபாய், சிங்கப்பூா் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த கல்லூரி பேராசிரியா்கள் ஹரிஹரன், பூமிச்செல்வம், சீதா லட்சுமி, சித்திரை பொன் செல்வன், சிவகுமாா், திரவியநாதன் திலீபன் மற்றும் தமிழ் அறிஞா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கருத்தரங்க ஏற்பாடுகளை கல்லூரி தமிழ் துறை பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com