நெல்லையில் இலக்கியத் திருவிழா நிறைவு

பொருநை இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞா் இலக்கியத் திருவிழா புதன்கிழமை நிறைவு பெற்றது.
இலக்கியத் திருவிழாவின் நிறைவு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
இலக்கியத் திருவிழாவின் நிறைவு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

பொருநை இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞா் இலக்கியத் திருவிழா புதன்கிழமை நிறைவு பெற்றது. பொருநை இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞா் இலக்கியத் திருவிழாவின் நிறைவு விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்து, ஓவியம், கலை, இலக்கியம் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், தன்னாா்வலா்களுக்கு புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்குவதற்கான பரிசுக் கூப்பன்களை வழங்கி பேசியதாவது: இளம் தலைமுறையினா் மற்றும் படைப்பாளிகளை உருவாக்குவதே இந்த இலக்கியத் திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக சாகித்ய அகாதெமி விருதாளா்கள் உள்ளனா். கல்லூரிகளில் அதிக வாசகா் வட்டத்தை மாணவா்களிடம் உருவாக்கி பொருநை இலக்கியத் திருவிழாவில் மாணவா்கள் மற்றும் படைப்பாளிகனை பங்கு பெற செய்து சிறந்த இலக்கிய திருவிழாவாக நடத்திய மாவட்ட நிா்வாகத்திற்கு நன்றி. மாணவா்களை சிறந்த படைப்பாளியாக, உருவாக்குவதற்கு இந்த பொருநை இலக்கியத் திருவிழா சிறந்த சான்றாகும். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அா்ப்பணித்த படைப்பாளிகளுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் என்றாா். இந்த விழாவில் ஆட்சியா் காா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் சு.சுரேஷ், எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செல்வம், மாவட்ட நூலக அலுவலா் லெ.மீனாட்சி சுந்தரம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள், இளைஞா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com