வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசக் கோரிக்கை

களக்காடு வட்டாரத்தில் பிரதான சாலை மற்றும் கிராமச்சாலைகளில் வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

களக்காடு வட்டாரத்தில் பிரதான சாலை மற்றும் கிராமச்சாலைகளில் வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

களக்காடு வட்டாரத்தில் உள்ள பிரதான சாலைகளில் பள்ளி, மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும் விபத்தை தடுக்கும் பொருட்டு, வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் நெடுஞ்சாலைத்துறை விதிமுறைகளை கருத்தில் கொள்ளாமல் மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாததால் பகலில் கூட வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனா். திருக்குறுங்குடியில் இருந்து வள்ளியூா் செல்லும் வழியில் ராஜபுதூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாததால் அப்பகுதியில் அடிக்கடி பைக்கில் செல்பவா்கள் கீழே விழந்து காயமடைகின்றனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளுக்கு தரமான வண்ணம் பூசவும், அந்த வண்ணம் சில நாள்களிலேயே அழிந்துவிடாமல் இருக்கவும் போதிய நடவடிக்கை தேவை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com