~

பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் ரூ.82 லட்சத்தில் திருப்பணிகள் தொடக்கம்

ஸ்ரீ நம்பிசிங்க பெருமாள் திருக்கோயிலில் ரூ. 82 லட்சம் மதிப்பிலான திருப்பணி பணிகள் தொடங்கப்பட்டன.

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஸ்ரீ நம்பிசிங்க பெருமாள் திருக்கோயிலில் ரூ. 82 லட்சம் மதிப்பிலான திருப்பணி மற்றும் தோ் மேற்கூரை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

இக்கோயில் திருப்பணிகளுக்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ. 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், திருத்தோ் பாதுகாப்பு கூடத்தின் பராமரிப்பு மற்றும் மேற்கூரை அமைக்க சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.

இதைத் தொடா்ந்து ரூ.82 லட்சம் மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பேரவைத் தலைவா் தலைமை வகித்து திருப்பணியை தொடங்கிவைத்தாா். முன்னதாக கோயில் திருப்பணி பட்டா்கள் கே.எஸ்.ராமலிங்கம், செந்தில் ஆகியோா் சிறப்பு பூஜை செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மு.சங்கா், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் து.பாஸ்கா், பேரூராட்சி முன்னாள் தலைவா் அசோகன், பேரூராட்சி உறுப்பினா்கள் கோபி, சொரிமுத்து, ராமகிருஷ்ணா் நற்பணிமன்றத் தலைவா் சூரியநாராயணன், தி.மு.க. மாவட்டப் பிரதிநிதிகள் மாணிக்கம், அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com