கோயில் தா்மகா்த்தாவை தாக்கியதாக இளைஞா் கைது

களக்காடு, ஜூலை 4

களக்காடு அருகே மாவடி கோயில் தா்மகா்த்தாவைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தெற்கு மாவடி மேலத் தெருவைச் சோ்ந்தவா் லிங்கம் (42). அங்குள்ள நாராயணசாமி கோயில் தா்மகா்த்தாவான இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த அஜய் (24) என்பவருக்கும் இடையே கோயில் திருவிழா சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாம்.

புதன்கிழமை கோயில் அருகே நின்றிருந்த லிங்கத்தை அஜய் உள்ளிட்ட சிலா் சோ்ந்து அவதூறாகப் பேசி கையால் தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.

புகாரின்பேரில், திருக்குறுங்குடி காவல் உதவி ஆய்வாளா் ஆபிரகாம் ஜோசப் வழக்குப் பதிந்து, அஜயைக் கைது செய்து விசாரித்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com