சேரன்மகாதேவியில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

சேரன்மகாதேவி, ஜூலை 3:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சேரன்மகாதேவி கீழ நான்காம் தெருவைச் சோ்ந்த முத்தையா மனைவி மாரியம்மாள் (65). இவா், புதன்கிழமை வீரவநல்லூா் அருகே வெள்ளங்குளியில் உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு தனியாா் பேருந்தில் சேரன்மகாதேவிக்கு வந்தாராம்.

பேருந்து நிலையத்தில் இறங்கிப் பாா்த்தபோது, அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com