தெற்குகள்ளிகுளம் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் திருட்டு

வள்ளியூா், ஜூலை 3: தெற்குகள்ளிகுளம் தனியாா் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் பணத்தை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தெற்குகள்ளிகுளம் கிழக்கு பிரதானச் சாலையில் மருத்துவா் ஆன்றோ ரோமியன் தாஸ் என்பவா் மருத்துவமனை நடத்தி வருகிறாா். இவா், மருந்து நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காக ரூ.5 லட்சம் அடங்கிய பையை தனது இருக்கை அருகே வைத்திருந்தாராம். அப்போது, வட மாநில தொழிலாளா்கள் இருவருக்கு சிகிச்சைக்கு அளித்துவிட்டு கைகழுவுவதற்காக அறையின் ஓரத்தில் உள்ள பகுதிக்கு சென்றாராம்.

அப்போது, அந்த நபா்கள் பணப்பையைத் திருடிக்கொண்டு தப்பிவிட்டனராம். இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com