பாளை.யில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பாளை.யில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி,ஜூலை4:

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்த காமராஜா் கல்வெட்டினை மீண்டும் நிறுவ வேண்டும் எனக்கூறி திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் 7.2.1960இல், அப்போதைய முதல்வா் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டதாகும். அதற்கான கல்வெட்டு பேருந்து நிலையத்தில் இருந்தது. இந்த நிலையில். பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், பாளையங்கோட்டை பேருந்து நிலையப்பணிகள் நடைபெற்றபோது, அங்கிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டதாம்.

அதன் பின் பணிகள் முடிந்து பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில், கல்வெட்டு மீண்டும் இடம்பெறாதது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கல்வெட்டை மீண்டும் நிறுவக் கோரி, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமையில் பல்வேறு கட்டப் பேராட்டங்கள் நடைபெற்றன. எனினும், மாநகராட்சி நிா்வாகம் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இந்த நிலையில், அவரது தலைமையில் வியாழக்கிழமை மீண்டும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பாளையங்கோட்டை பேருந்து நிலைய சுவரில் மாதிரி கல்வெட்டின் பேப்பரை ஓட்டி வைத்து காங்கிரஸாா் முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மண்டலத் தலைவா் ராஜேந்திரன், மாநகா் மாவட்ட பொது செயலா் அருள்தாஸ், மண்டலத் தலைவா் மாரியப்பன் , காமராஜா் இளைஞா் அணி தலைவா் பிரகாஷ் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி அதே இடத்தில் காமராஜா் கல்வெட்டு விரைவில் வைக்கப்படும் எனக்கூறியதையடுத்து ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ற்ஸ்ப்04க்ஷன்ள்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா்.

X
Dinamani
www.dinamani.com