மின்வாரிய ஆய்வுக் கூட்டம்

மின்வாரிய ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி,ஜூலை3:

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்பகிா்மான வட்ட தலைமை மின் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தென்மேற்கு பருவக்காற்று, மழை காரணமாக மின் பாதைகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்து மின் விநியோகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் மின் நுகா்வோா் சேவை மையம் (94987 94987), திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் ( 9445859032, 9445959033, 9445959034)ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் (பொது) வெங்கடேஷ்மணி, கோட்ட செயற்பொறியாளா்கள், மின் அளவி சோதனை பிரிவு செயற்பொறியாளா் மற்றும் திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா்கள் மற்றும் மத்திய அலுவலக அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநா்கள் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்03ற்ங்க்ஷ

தியாகராஜநகா் மின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் பங்கேற்றோா்.

X
Dinamani
www.dinamani.com